சீனக் கடன் செயலி: மத்திய அரசு அறிவுறுத்து

சீனக் கடன் செயலி: மத்திய அரசு அறிவுறுத்து

1 mins read
b0566e5e-6ddc-4c72-a816-650451212d7c
-

புது­டெல்லி: சீன கடன் செயலி மூலம் கடன் வாங்­கி­ய­வர்­கள் பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு ஆளாகி வரு­வதை அடுத்து அனைத்து மாநி­லங்­களும் இது தொடர்­பாக உரிய நட­வ­டிக்­கை­மேற்­கொள்ள வேண்­டும் என மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

இது தொடர்­பாக மாநில அரசு ­க­ளுக்கு அனுப்பி உள்ள கடி­தம் ஒன்­றில், சட்ட விரோத கடன் செய­லி­க­ளால் நாட்­டின் பாது­காப்பு, பொரு­ளா­தா­ரம், பொது­மக்­க­ளின் உயி­ருக்கு கடும் அச்­சு­றுத்­தல் ஏற்­பட்­டுள்­ள­தாக மத்­திய அரசு குறிப்­பிட்­டுள்­ளது.

சீன நிறு­வ­னங்­க­ளு­டன் தொடர்­பு­டைய கடன் செய­லி­கள் குறித்து அர­சுக்கு ஏரா­ள­மான புகார்­கள் வந்­துள்­ளன. எனவே, இந்­தச் செய­லி­கள் தொடர்­பாக கடும் நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்.

"இது தொடர்­பான தொழில்­நுட்ப உத­வி­க­ளுக்கு தேசிய இணைய குற்­றத் தட­ய­வி­யல் ஆய்­வுக் ­கூ­டத்­தின் சேவையைப் பெற­லாம். இது­போன்ற செய­லி­கள் குறித்து மக்­களுக்கு விழிப்­புணர்வை ஏற்­ப­டுத்தவேண்­டும்," என மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

சீன கடன் செயலி மூலம் கடன் பெறு­வோ­ரி­டம் மிக அதி­க­மான வட்டி வசூ­லிக்­கப்­ப­டு­வதாகவும் கடன் தொகை, வட்டியைச் செலுத்த தவறி­னால், கடன் வாங்­கி­ய­வர்­கள் மிரட்­டப்­படு­வ­தா­க­வும் பர­வ­லா­கப் புகார்­கள் எழுந்­துள்­ளன. இத்­தகைய செய­லி­களைத் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.