இந்தியாவின் முதலாவது சூரிய மின்சக்தி கிராமம்

இந்தியாவின் முதலாவது சூரிய மின்சக்தி கிராமம்

1 mins read
ce36c5f6-7dfd-43ee-8b9e-a41c3159d744
மோதேரா கிராமத்தில் 1,300க்கும் மேற்பட்ட சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

அகமதாபாத்: குஜ­ராத்­தின் மோதேரா கிரா­மம் இந்­தி­யா­வின் முதல் சூரிய சக்தி கிரா­ம­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக அம்­மா­நில அரசு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில், அக்­கி­ரா­மத்­தில் உள்ள நூற்­றுக்­க­ணக்­கான வீடு­களில் சூரிய சக்தி தக­டு­கள் பொருத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் 24 மணி­நே­ர­மும் மின்­சாரம் உற்­பத்தி செய்­யப்­ப­டுவதாகவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சூரிய சக்தி பயன்­பாடு கார­ண­மாக, இக்­கி­ராம மக்­க­ளின் மின்சாரப் பயன்­பாடு 60 முதல் நூறு விழுக்­காடு வரை குறைந்­துள்­ளது.

கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தில் உல­கின் மூன்­றா­வது நாடாக உள்ள இந்­தியா, தனது எரி­சக்தி தேவை­யில் சரி­பா­தியை புதுப்­பிக்­கத்­தக்க ஆற்றல்மூலங்­க­ளான சூரிய சக்தி, காற்­றா­லை­கள் மூலம் ஈடு­கட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் 2030ஆம் ஆண்­டுக்­கள் இந்த இலக்கை அடைய திட்­ட­மிட்­டுள்ள இந்­திய அரசு, மோதேரா கிரா­மத்­தில் சூரிய சக்தி உற்­பத்தி திட்­டத்­துக்­காக 10 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர்­க­ளைச் செல­விட்­டுள்­ளது.

சுமார் 6,500 பேர் வசித்து வரும் இந்த கிரா­மத்­தில், 1,300க்கும் மேற்­பட்ட சூரிய சக்தி தக­டு­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

விவ­சா­யி­கள், தையல் கலை­ஞர்­கள், குய­வர்­கள் அதி­கம் வசிக்­கும் இந்த கிரா­மத்­தைச் சேர்ந்த பல­ரும் தங்­க­ளுக்­கான மின்­கட்­ட­ணம் வெகு­வாக குறைந்­துள்­ளது என்­றும் தங்­கள் துறை சார்ந்த உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது என்­றும் தெரி­வித்­த­னர்.