புதுடெல்லி: ஒடிசா, பீகார் உட்பட ஐந்து மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும்.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் பரிசீலனை இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி நாள் இம்மாதம் 21ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும்.
டிசம்பர் 10ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

