ரவுடியின் தலையைத் துண்டித்து அதைக் காற்பந்துபோல உதைத்த எதிரிகள்

ரவுடியின் தலையைத் துண்டித்து அதைக் காற்பந்துபோல உதைத்த எதிரிகள்

1 mins read
e51a37ff-5824-4ac4-96bc-d4e689b60387
கொலை நிகழ்ந்த இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர். படம்: இந்திய ஊடகம் -

ரவுடியை எதிரிகள் கொடூரமாகக் கொன்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், சந்திராப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்தது.

மகேஷ் மேஷ்ரம் எனும் அந்த 32 வயது ரவுடியின் தலையைத் துண்டித்து அதைக் கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரத்திற்கு காற்பந்தை உதைப்பதுபோல கொலையாளிகள் உதைத்தது அங்கிருந்தவர்களைப் பதைபதைக்க வைத்தது.

மகேஷுக்கும் கொலையாளிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தம்முடைய நண்பர்களுடன் சேர்ந்து மகேஷ் திங்கள்கிழமை மதுபானக்கூடத்திற்குச் சென்றிருந்தார். மது அருந்திவிட்டு அங்கிருந்து இரவு 10 மணியளவில் வெளியேறி காரில் ஏறவிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த எட்டுப் பேர், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மகேஷை தாக்கினர்.

அவர்களை எதிர்த்து மகேஷ் சண்டையிட முற்பட்டார். ஆனால், அவர்களின் தாக்குதலுக்கு மகேஷால் ஈடுகொடுக்க முடியவில்லை.

மகேஷை தாக்கியவர்களில் ஒருவர், மகேஷின் தலை துண்டிக்கப்படும் வரை அவரது கழுத்தை வெட்டினார். துண்டிக்கப்பட்ட தலையைத் தூக்கிய கொலையாளிகள், 50 மீட்டர் தூரத்திற்கு உதைத்துத் தள்ளி பின்னர் அங்கிருந்து தப்பிவீட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அளித்த வாக்குமூலம், மகேஷின் முந்தைய குற்றவியல் செயல்களின் அடிப்படையில் சந்தேகப் பேர்வழிகள் இருவரை சில மணி நேரத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்பில் மேலும் எட்டுப் பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்