பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னைக்கும் மைசூருக்கும் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார்.
நாட்டின் ஐந்தாவது இத்தகைய சேவையான இது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும்.
"விமானத்தைப்போல வேகமாகச் செல்லும் இந்த விரைவுரயில் இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியின் அடையாளமாக விளங்குகிறது. இந்த ரயிலைப் போலவே இந்தியாவும் இப்போது வேகமாக முன்னேறி வருகிறது," என்று பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார். கெம்பேகௌடா அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தையும் அவர் திறந்துவைத்தார்.
இம்முனையம் ரூ.5,000 கோடி செலவில் 255,645 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

