அரசு: தலித் கிறிஸ்துவர்களோ முஸ்லிம்களோ பின்தங்கியதாக வரலாற்றில் பதிவுகள் இல்லை

அரசு: தலித் கிறிஸ்துவர்களோ முஸ்லிம்களோ பின்தங்கியதாக வரலாற்றில் பதிவுகள் இல்லை

1 mins read
d1ff8fbb-5ebc-4d6e-93de-7828ea6d77cb
-

புது­டெல்லி: தலித் கிறிஸ்துவர்­களை­யும் முஸ்­லிம்­க­ளை­யும் தாழ்த்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கிய முடிவை மத்­திய அரசு தற்­காத்­துப் பேசி­யுள்­ளது.

வர­லாற்­றுப் புள்­ளி­வி­வ­ரங்­களை ஆராய்ந்­தால் தலித் கிறிஸ்துவர்களோ தலித் முஸ்­லிம்­களோ பின்­ன­டை­வைச் சந்தித்ததாக எந்­தப் பதி­வும் இல்லை. எனவே இவர்­கள் தாழ்த்­தப்­பட்­டோ­ருக்­கான சலு­கை­க­ளைப் பெற இய­லாது என்று உச்ச நீதி­மன்­றத்­தில் மத்­திய சமூக நீதி அமைச்சு தெரி­வித்­தது.

1950ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட நாட்­டின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின்­கீழ் தாழ்த்­தப்­பட்­ட­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள் , சமு­தாய ரீதி­யில் பேதங்களை எதிர்­கொண்­ட­வர்­கள் என்­பதை அது குறிப்­பிட்­டது.

இந்து சம­யத்­தின் சில பிரி­வினர்­மீது காட்­டப்­பட்ட தீண்­டா­மைப் பழக்­கத்­தால் பொரு­ளி­யல் ரீதி­யா­க­வும் சமு­தாய ரீதி­யா­க­வும் அவர்­கள் பின்­தங்க நேரிட்­டது.

ஆனால் கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய சம­யங்­களில் இத்­த­கைய தீண்­டா­மைக் கொடுமை இல்லை என்­ப­தால் அந்த சம­யங்­க­ளுக்கு மாறி­ய­வர்­கள் எந்­த­வி­தத்­தி­லும் பின்­ன­டை­வைச் சந்­திக்­க­வில்லை என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

ஒரு­வ­கை­யில் பார்த்­தால், இத்­த­கைய பின்­ன­டை­வில் இருந்து மீளும் வழி­யா­கவே அந்­தக் காலத்­தில் பல­ரும் கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய சம­யங்­க­ளுக்கு மாறி­னர். எனவே அவர்கள் சலுகைபெற இயலாது என்று அமைச்சு எடுத்­துக்­கூ­றி­யது.