சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். நேற்றுக் காலை எட்டு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.
வாக்குப் பதிவிற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்றுப் பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி 55.65 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 7,881 வாக்குச்சாவடிகளில் ஒன்று 15,526 அடி உயரத்தில் தஷிகங் மலையில் அமைக்கப்பட்டது. இது உலகின் ஆக உயரமான வாக்குச்சாவடி.
வாக்குகள் அடுத்த மாதம் 8ஆம் தேதி குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்படும்.

