அதிபர் முர்மு: தாய்மொழிக் கல்வி சமவாய்ப்பு அளிக்கிறது

அதிபர் முர்மு: தாய்மொழிக் கல்வி சமவாய்ப்பு அளிக்கிறது

1 mins read
fc8fdf30-525f-4286-b69a-1043686b8579
-

புவ­னேஸ்­வர்: ஒடிசா மாநி­லம் புவ­னேஸ்­வ­ரில் மத்­திய கல்வி அமைச்­சின் பல்­வேறு திட்­டங்­களை அதி­பர் திரௌ­பதி முர்மு தொடங்கி வைத்து உரையாற்றினார்.

"நாட்­டில் உள்ள குழந்­தை­கள் அனை­வருக்­கும் கல்வி கிடைப்­பதை உறுதி­செய்­வ­தற்கு, ஆன அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொள்ள வேண்­டும். தொழில்­நுட்­பக் கல்­வியை ஆங்­கி­லத்­தில் புரிந்­து­கொள்ள பல மாண­வர்­கள் சிர­மப்­படு­வதால்தான் தேசி­யக் கல்­விக் கொள்­கை­யில் தொழில்­நுட்­பக் கல்­வியை மாநில மொழி­களில் வழங்க மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது," என்றார் அதிபர்.

"தாய்­மொ­ழி­யில் கல்வி கற்­ப­தால் மாண­வர்­க­ளி­டம் ஆக்­க­க­ர­மான சிந்­தனை உரு­வா­கும், பகுப்­பாய்­வுத் திறன் மேம்­படும். இது நகர்ப்­புற மற்­றும் கிரா­மப்­புற மாண­வர்­க­ளுக்கு சம­மான வாய்ப்­பு­களை வழங்­கும்," என்­று அவர் கூறினார்.