புதுடெல்லி: இறந்த தந்தையை மீண்டும் உயிர்பெறச் செய்யும் முயற்சியில் பிறந்து இரண்டு மாதமே ஆன பச்சிளங்குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற மாது (படம்) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு கைலாஷ் பகுதியைச் சேர்ந்த இவர் தந்தைமீது மிகுந்த பாசம் கொண்டவர். குழந்தை ஒன்றை நரபலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என யாரோ கூறிய ஆலோசனையைக் கேட்டு இரண்டு மாதக் குழந்தையை இவர் கடத்தினார். ஆனால் தனது திட்டத்தை இவர் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே காவல்துறையினர் அதை முறியடித்து குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.