புதுடெல்லி: இந்திய ரயில்வேயின் 'யுடிஎஸ்' செயலி மூலம் முன்பதிவில்லா நுழைவுச் சீட்டுகளை வாங்குவதற்கான விதிமுறைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் புறநகர்ப் பயணிகள், நுழைவுச் சீட்டு எடுக்கும் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும்; தற்போது இந்த வரம்பு, 20 கிலோ மீட்டர்.
புறநகர்ப் பகுதி அல்லாத ரயில் நிலையங்களில், இரண்டு கிலோ மீட்டருக்குள் இருக்கவேண்டும் என்ற விதிமுறை இனி ஐந்து கிலோ மீட்டராக இருக்கும். அனைத்து மண்டலங்களிலும் இம்மாதம் 7ஆம் தேதி இது நடப்புக்கு வந்துள்ளது.

