பெங்களூரு: தோசைகளில் சாதா, மசால், கல், பொடி, நெய் தோசை என விதவிதமாக உள்ளன. இவ்வரிசையில் தங்க தோசை என்ற புதிய தோசையை உணவகம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில்தான் ஒரு புது முயற்சியாக இந்த தோசை பரிமாறப்படுகிறது.
உணவுப் பிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தங்க தோசை ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
முதலில் ஒரு மசால் தோசையைத் தயாரித்து, சூடாக இருக்கும்போதே அதன்மீது 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட மெல்லிய தாளினை ஒட்டிவிடுகின்றனர். குறைந்தது 20 தங்க தோசைகள் தங்களது உணவகத்தில் விற்பனையாவதாக உணவகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தோசையில் வைக்கப்படும் தங்கமுலாம் பூசப் பட்ட தாள்கள் குஜராத்தில் இருந்து தருவிக்கப்படுவதாகவும் கூறுகின்ற னர்.
இந்த தங்க தோசைக்கு 'கோல்டன் பாயில் எடிபல் மசால் தோசை' என பெயரிட்டுள்ளனர். இதனால், உடல்நலனுக்கு எந்த தீங்கும் விளை யாது என்றும் கூறப்படுகிறது.

