பாட்னா: பீகார் முன்னாள் முதல் வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 74, பலவித உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்துள்ளார் அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா. இவர், சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
"சிறுநீரகம் என்பது சிறிய தசைதான். என் தந்தைக்காக நான் எதையும் செய்வேன். உங்கள் அனைவருக்காகவும் குரல் கொடுப் பதற்காக அப்பா மீண்டும் உடல்நிலை சரியாகி வரவேண்டும் என்று பிரார்த்தியுங்கள்," என ரோஹினி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தன் பெற்றோரை கடவுளுக்கு நிகராகக் கருதுவதாகவும் மகள் என்ற கடமையைச் செய்ய தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்ட மாகக் கருதுவதாகவும் பெருமை யுடன் கூறியுள்ளார்.
ஊழல் வழக்குகள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட லாலு, நீதிமன்ற சிறப்பு அனுமதியுடன் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று அண்மையில் நாடு திரும்பினார்.

