இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல் குழந்தை இன்று மருத்துவரானார்

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல் குழந்தையான தாம், இன்று மருத்துவராகி சேவையாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் சஞ்சய் சக்தி கந்தசாமி.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சஞ்சய் சக்திக்கு ஒன்றரை வயதில் கல்லீரல் மாற்று அறுவை சிசிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அரியவகை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சக்திக்கு, அச்சமயம் மஞ்சம் காமாலை பாதிப்பு இருந்தது. இந்த நோய் உள்ளவர்களுக்கு கல்லீரலுக்கும் குடலுக்கும் இடையேயான இணைப்பு இல்லாததால் பித்தக்கழிவுகள் கல்லீரல் பகுதியிலேயே தங்கிவிடும். நாளடைவில் உயிரிழக்க நேரிடும்.

கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த சக்தியின் உயிரைக் காப்பாற்ற சென்னையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது தந்தையே மகனுக்கு கல்லீரல் தானம் அளித்தார்.

சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியதை அடுத்து, உயிர் பிழைந்த சக்திக்கு மருத்துவர்கள் ஒன்றுசேர்ந்து சஞ்சய் என்று புதுப்பெயர் சூட்டினர்.

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையால் உயிர்பிழைத்த முதல் குழந்தையான சஞ்சய் சக்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குழந்தைநல மருத்துவராகி உள்ளார்.

"2021ல் மருத்துவப் படிப்பை முடித்தேன். குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் குழந்தைநல மருத்துவரானேன்," என்கிறார் சஞ்சய் சக்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!