ஏர் இந்தியாவுக்கு 1.4 மில்லியன் டாலர் அமெரிக்கா அபராதம்

புது­டெல்லி: ஏர் இந்­தியா விமான நிறு­வ­னத்­துக்கு அமெ­ரிக்க போக்கு­வ­ரத்து அமைச்சு 1.4 மில்­லி­யன் டாலர் அப­ரா­தம் விதித்­து இருக்கிறது.

பய­ணி­க­ளுக்குப் பணத்தை திருப்பித் தரு­வ­தில் கால தா­ம­தம் ஏற்­பட்­ட­தைச் சுட்­டிக்­காட்டி இந்த அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

கொரோனா நெருக்­க­டிக்­குப் பிறகு விமா­னப் பய­ணங்­க­ளுக்­கான முன்­ப­திவை ரத்து செய்­வ­தும் பய­ணத் தேதியை மாற்­று­வ­தும் அதி­க­ரித்து வரு­கிறது. இவ்­வாறு மாற்­றம் செய்த பய­ணி­க­ளுக்கு, சில விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி விமான நிறு­வ­னங்­கள் குறிப்­பிட்ட தொகையைத் திருப்பி அளிப்­பது வழக்­கம். விமான நிறு­வ­னங்­கள் இவ்­வாறு மாற்­றங்­கள் செய்­தா­லும் குறிப்­பிட்ட தொகை திருப்பி அளிக்­கப்­ப­டு­வ­துண்டு.

இந்­நி­லை­யில், பயணத் தேதி, நேரத்தை மாற்­றிக்­கொண்ட, பய­ணத்தை மொத்­த­மாக ரத்து செய்த பய­ணி­க­ளுக்கு உரிய தொகையைத் திருப்பித் தரு­வ­தில் ஏர் இந்­தியா நிறு­வ­னம் மெத்­த­னம் காட்­டி­ய­தா­கப் புகார் எழுந்­தது.

தொகையைத் திருப்­பித் தர அதிக காலம் எடுத்­துக்­கொண்­ட­தாக எழுந்த புகாரை அடுத்து, பாதிக்­கப்­பட்ட பய­ணி­க­ளுக்கு 121.5 மில்­லி­யன் டாலரை திருப்பித் தர அமெ­ரிக்க போக்­கு­வ­ரத்து அமைச்சு உத்­த­ர­விட்­டது. இது­போக அப­ரா­த­மும் விதித்­துள்­ளது.

ஏர் இந்­தியா உட்­பட ஆறு நிறு­வ­னங்­க­ளுக்கு இவ்­வாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. மொத்­தம் 600 மில்­லி­யன் டாலர் தொகை­யைச் செலுத்த ஆறு விமான நிறு­வ­னங்­களும் ஒப்­புக்­கொண்­ட­தாக போக்கு­வ­ரத்து அமைச்சு தெரி­வித்­தது.

குறிப்­பிட்ட காலகட்­டத்­தில் ஏர் இந்­தியா ரத்து செய்த அல்லது நேரத்தை மாற்­றி­ய­மைத்த விமானச் சேவை­கள் தொடர்­பாக 1,900 புகார்­கள் பதி­வாகி உள்­ளன. அவற்றின் மீது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்ள ஏர் இந்­தியா நிறு­வ­னம் நூறு நாள்­க­ளுக்­கும் மேல் அவ­கா­சம் எடுத்­துக்கொண்­டது. இதை­ய­டுத்தே அந்­நி­று­வ­னத்­துக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை அண்­மை­யில்­தான் டாடா குழு­மம் வாங்­கி­யது. ஆனால் மேற்­கு­றிப்­பிட்ட அப­ராத விதிப்­புக்­குக் கார­ண­மான புகார்­கள் அதற்­கும் முன்­பா­கவே பதி­வா­னவை என இந்­திய ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!