கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்ற முதல் குழந்தை இன்று மருத்துவர்

காஞ்­சி­பு­ரம்: இந்­தி­யா­வில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து ­கொண்ட முதல் குழந்­தை­யான நான், இன்று மருத்­து­வ­ராகி சேவை­யாற்றி வரு­வது மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார் சஞ்­சய் சக்தி கந்­த­சாமி.

காஞ்­சி­பு­ரத்­தைச் சேர்ந்த சஞ்­சய் சக்­திக்கு ஒன்­றரை வய­தில் கல்­லீ­ரல் மாற்று அறுவை சிசிச்சை நடை­பெற்­றது.

அரிய வகை கல்­லீ­ரல் நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குழந்தை சக்­திக்கு, அச்­ச­ம­யம் மஞ்­சள் காமாலை பாதிப்பு இருந்­தது. இந்த நோய் உள்­ள­வர்­க­ளுக்கு கல்­லீ­ர­லுக்­கும் குட­லுக்­கும் இடை­யே­யான இணைப்பு இல்­லா­த­தால் பித்­தக்­கழி­வு­கள் கல்­லீ­ரல் பகு­தி­யி­லேயே தங்­கி­வி­டும். நாள­டை­வில் உயி­ரி­ழக்க நேரி­டும்.

கடந்த 1997ஆம் ஆண்டு பிறந்த சக்­தி­யின் உயி­ரைக் காப்­பாற்ற சென்­னை­யில் கல்­லீ­ரல் மாற்று அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. அவ­ரது தந்­தையே மக­னுக்கு கல்­லீ­ரல் தானம் அளித்­தார்.

சிகிச்சை வெற்றி பெற்­றதை அடுத்து, உயிர் பிழைத்த குழந்தை சக்­திக்கு மருத்­து­வர்­கள் ஒன்று சேர்ந்து சஞ்­சய் என்று புதுப்­பெயர் சூட்­டி­னர். இந்­தி­யா­வில் கல்­லீ­ரல் மாற்று அறுவை சிகிச்­சை­யால் உயிர்­பி­ழைத்த முதல் குழந்­தை­யான சஞ்­சய் சக்தி, 24 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, இன்று குழந்­தை­கள் நல மருத்­து­வ­ராகி உள்­ளார்.

"2021ல் மருத்­து­வப் படிப்பை முடித்­தேன். குழந்­தை­கள் என்­றால் எனக்கு மிக­வும் பிடிக்­கும். அத­னால் குழந்­தை­கள் நல மருத்­து­வ­ரா­னேன்," என்­கி­றார் சஞ்­சய் சக்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!