உரிமையாளரைக் கண்டுபிடிக்க உதவிய வளார்ப்பு நாய்

உரிமையாளரைக் கண்டுபிடிக்க உதவிய வளார்ப்பு நாய்

1 mins read
a90a47f8-f7fc-4980-a581-bbfb34e90536
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லம் ஷிவ­மோகா மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர் சேக­ரப்பா. 55 வய­தான இவர் கடந்த 12ஆம் தேதி விறகு வெட்டி வர தன் வீட்­டுக்கு அருகே உள்ள காட்­டுப் பகு­திக்­குச் சென்­றுள்­ளார்.

தின­மும் காலை ஆறு மணிக்குச் சென்று பத்து மணிக்கு விறகுகளுடன் வீடு திரும்­பு­வது அவ­ரது வழக்­கம்.

இந்­நி­லை­யில் 12ஆம் தேதி நீண்ட நேர­மா­கி­யும் அவர் வீடு திரும்­பா­த­தால் குடும்­பத்­தார் கவலை அடைந்து அண்டை வீட்­டா­ரின் உத­வி­யோடு அவ­ரைத் தேடி­னர். எங்­கும் அவ­ரைக் காண முடி­யா­மல், அனை­வ­ரும் தவித்­த­போது, சேக­ரப்­பா­வின் செல்­லப்­பி­ரா­ணி­யான டாமி என்ற நாய் திடீ­ரென குறிப்­பிட்ட இடத்தை நோக்கி ஓடி­யது. அனை­வ­ரும் அங்கு சென்று பார்த்­த­போது சேக­ரப்பா மயங்­கிக் கிடப்­பது தெரி­ய­வந்­தது. இதை­யடுத்து அவர் மீட்­கப்­பட்­டார்.

அதிக வெப்­பம் கார­ண­மாக அவர் மயக்­க­ம­டைந்­தது தெரி­ய­வந்­தது. உரிய நேரத்­தில் சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தால் அவர் உயிர் பிழைத்­தார். டாமிக்கு பாராட்­டு­கள் குவி­கின்­றன.