ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்தவர் மூன்றை விற்றார்

ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்தவர் மூன்றை விற்றார்

1 mins read
b3e3b456-0c18-46b9-b47b-7f7ced922796
-
Google News Preferred Icon

2018 மார்ச் மாதத்துக்கும் இவ்வாண்டு ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்துக் குழந்தைகளை ஈன்றெடுத்த ரிதா பிரஜாபதி என்பவர், அவற்றில் மூன்றை விற்றுவிட்டார்.

அத்துடன், எட்டு மாத ஆண் குழந்தையைத் திருடி, குழந்தையில்லாத தம்பதியிடம் அதை ரூ.2.50 லட்சத்துக்கு விற்றதன் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து மற்ற நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

பிரஜாபதியும் அவருடைய கணவர் யோகேந்திராவும் தற்போது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தங்களுடைய மூன்று மாத பெண் குழந்தையை ரூ.50,000க்கும் இரு ஆண் குழந்தைகளை தலா ரூ.25,000க்கும் பிரஜாபதி தம்பதியர் விற்றனர். விற்கப்பட்ட ஆண் குழந்தைகளில் ஒன்று மீட்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் இத்தம்பதியர் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றுவந்ததாக நாக்பூர் காவல்துறை தலைவர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.