தேநீர்க் கடையில் கடமான் (காணொளி)

வனவிலங்குகள் தங்களது சொந்த வசிப்பிடத்தில்தான் வாழ விரும்பும். ஆனால், மக்கள்தொகை அதிகரித்து வருவதாலும் சாகசம் நிறைந்த சுற்றுப்பயணிகளாலும் ஒருகாலத்தில் சென்றுவருவதற்கு சிரமமானதாக இருந்த இடங்களுக்கு இப்போது சென்றுவருவது எளிதாகிவிட்டது.

கூடுதலான வனவிலங்குகள் மனிதர்களுடன் தொடர்பில் வர இந்த நிலை வித்திட்டுள்ளது. சில வேளைகளில் இது ஆபத்தாக இருக்கலாம். மற்ற சில சமயங்களில் இது நினைவில் வைக்கத்தக்க தருணங்களை ஏற்படுத்தக்கூடும்.

அந்த வகையில், இந்தியாவில் கடமான் (Sambar deer) ஒன்று தேநீர்க் கடைக்குச் சென்று அங்குள்ள சிற்றுண்டிகளை உண்பதைக் காட்டும் காணொளியை இந்திய வனப்பகுதி சேவை அதிகாரி சம்ரட் கௌடா டுவிட்டரில் பகிர்ந்தார்.

டீக்கடைக்கு முன்னால் அந்த கடமான் நிற்பதையும் அங்குள்ள உணவை அது பார்வையிடுவதையும் காணொளி காட்டுகிறது. உணவுப் பொருள் ஒன்றைக் கையில் வைத்திருக்கும் ஆடவர் ஒருவர், கடமானை ஒரு பக்கத்திற்கு வரச் சொல்கிறார். அதைப் புரிந்துகொண்ட கடமான், அவர் கூப்பிடும் இடத்துக்கு நகர்கிறது.

அந்த ஆடவர் அதற்கு உணவு வழங்குகிறார். அதை அந்த மான் சாப்பிடுகிறது. டீக்கடையில் இருக்கும் மற்றவர்கள் மானை உன்னிப்பாகக் கவனிக்க அதை நோக்கி நகர்கின்றனர்.

அங்கிருக்கும் வேறோர் ஆடவர், மானுடன் தம்மை புகைப்படம் எடுக்குமாறு நண்பரிடம் கேட்கிறார். அந்த மானின் கொம்புகளையும் அவர் தொட்டுப் பார்க்கிறார். மற்றொருவர் அந்த மானுக்கு தேநீர் வழங்க முன்வந்தார். ஆனால், அதைப் பருந்த மான் மறுத்துவிட்டது.

இந்தியாவில் இந்தக் காணொளி எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது பற்றிய விவரம் குறிப்பிடப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!