புதுடெல்லி: பாரத் ஜோடோ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினரான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வரு கிறார்.
இந்த நடைப்பயணம் தற்போது மராட்டிய மாநிலத்தை அடைந்து உள்ளது.
அகோலா மாவட்டத்தின் பாலா பூர் பகுதியில் இருந்து வியாழன் காலை தொடங்கிய நடைபயணம் ஷோகன் நகரை அடைந்தது.
அப்போது மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்று கூடவே நடந்து வந்தார்.
இதற்கிடையே நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப் படுவார் என மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு இனிப்பு கடை வாசலில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, இது புரளியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது. மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

