விண்ணில் பாய்ந்த தனியார் ஏவுகணை

விண்ணில் பாய்ந்த தனியார் ஏவுகணை

1 mins read
94567182-a36b-44af-8419-ab50b62352e5
-

இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­னம் (இஸ்ரோ), ஆந்­திர மாநி­லம் ஸ்ரீஹ­ரி­கோட்­டா­வில் உள்ள சதீஷ் தவான் விண்­வெளி ஆய்வு மையத்­தில் இருந்து, முழு­மை­யாக தனி­யார் நிறு­வ­னம் தயா­ரித்த ஏவு­க­ணையை (படம்) நேற்று காலை 11.30 மணிக்கு விண்­ணில் ஏவி­யது.

தெலுங்­கானா தலை­ந­கர் ஐத­ரா­பாத்தை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­படும், 'ஸ்கை­ரூட் ஏரோஸ்­பேஸ்' என்ற நிறு­வ­னம் 'விக்­ரம்-எஸ்' என்ற இந்த ஏவு­க­ணை­யைத் தயா­ரித்து உள்­ளது. இது, இந்­தி­யா­வில் தனி­யார் நிறு­வ­னம் தயா­ரித்த முதல் ஏவு­க­ணை­யா­கும். இது, 2 இந்­திய செயற்­கை­கோள்­கள், ஒரு வெளி­நாட்டு செயற்­கை­கோள்­கள் உள்­பட 3 செயற்­கை­கோள்­களை சுமந்து சென்­றது. படம்: இபிஏ