'பயங்கரவாதத்துக்கு உதவினால் தண்டனை'

'பயங்கரவாதத்துக்கு உதவினால் தண்டனை'

2 mins read
c345211b-5d2f-4113-b71f-6b4979bd2a55
-

புது­டெல்லி: பயங்­க­ர­வா­தத்­தால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட நாடு­களில் இந்­தி­யா­வும் ஒன்று என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

தீவி­ர­வா­தத்­திற்கு உத­வும் நாடுகள் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தீவி­ர­வா­தத்­துக்கு நிதி­யு­தவி கிடைப்­பதை தடுக்­கும் நோக்­கத்து­டன் டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மாநாட்­டில் கலந்­து­கொண்­ட­போதே பிர­த­மர் மோடி இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

"உல­கம் முழு­வ­தும் தீவி­ர­வாதத்தை அடி­யோடு வேர­றுக்­கும் வரை நாம் ஓய மாட்­டோம். தீவி­ர­வா­தத்தை ஆத­ரிக்­கும் அத்­த­கைய நாடு­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த வேண்­டும்.

"தீவி­ர­வா­தத்தை எதிர்த்து இந்தியா எப்­போ­தும் வீரத்து­டன் போரிட்டு வரு­கிறது. போர் இல்லா­விட்­டால் அமைதி நில­வும் என்று உலக அள­வில் செயல்­படும் அமைப்பு­கள் நினைக்­கக்­கூ­டாது.

"மறை­முக போர்­களும் ஆபத்­தானவை என்­பதை நாம் உண­ர­வேண்­டும். எந்­த­ நா­டாக இருந்­தாலும் தீவி­ர­வா­தத்தை ஆத­ரிக்­கும் எவ­ருக்­கும் ஆத­ரவு அளிக்­கக்­கூடாது," என்­றார் பிர­த­மர் மோடி.

ஒரே ஒரு தாக்­கு­தல் நடை­பெற்­றா­லும் அதுவும் பயங்­க­ர­வா­தம்­தான் என்­றும் ஒரே ஓர் உயிர்ப்­பலி என்றாலும் அது பெரிய இழப்­பு­தான் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

பயங்­க­ர­வா­தத்­தின் நீண்ட கால தாக்­கம் என்­பது ஏழை மக்­கள் மீது­தான் அதி­க­மாக உள்­ளது என்று குறிப்­பிட்ட அவர், பயங்­க­ர­வா­தச் செயல்­பாடு என்­பது உள்­நாட்­டுப் பொரு­ளி­ய­லை­யும் பாதிக்­கும் என்றார்.

"இந்த உல­கம் பயங்­க­ர­வா­தத்­தின் கோர முகத்தை உண­ரும் முன்­னரே இந்­தியா அதன் தாக்­கத்தை சந்­தித்­து­விட்­டது.

"இந்­தி­யா­வில் பல்­வேறு கால­கட்­டங்­களில் பல்­வேறு பெயர்­களில், வகை­களில் பயங்­க­ர­வா­தம் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

"விலை ம­திப்­பற்ற ஆயி­ரக்­கணக்­கான உயிர்­களை நாம் இழந்­துள்­ளோம். ஆனா­லும், நாம் துணிச்­ச­லு­டன் பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்­துப் போரா­டி­யுள்­ளோம்," என்­றார் பிர­த­மர் மோடி.

பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­யு­தவி அளிக்­கும் வேரைக் கண்­ட­றிந்து ஒழிக்க வேண்­டும் என்­றும் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்­தில் திட்­ட­மிட்ட குற்­றங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை மிக­வும் முக்கி­ய­மா­னது என்­றும் அவர் கூறினார்.