அமராவதி: உத்தரகாண்ட் மாநிலம், ஜோஷிமாத் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 12 பேர் பலியாகிவிட்டனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த அந்தக் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
அந்தக் காரில் 16 பேர் பயணம் செய்ததாகவும் காருக்குள் நெருக்கியடித்து அமர்ந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், காரின் மேல் பகுதியிலும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். காரில் இருந்த இருவர் பள்ளத்தில் கார் கவிழ இருந்த கடைசி நொடியில் அதிலிருந்து வெளியே குதித்ததால் உயிர் தப்பினர்.

