காவல்துறை சான்றிதழ் தேவை இல்லை: சவூதி அறிவிப்பு

2 mins read
5faa37bc-82b0-4011-80f5-a56f7def8ac7
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இருந்து சவூதி அரே­பி­யா­வுக்கு வேலைக்கு வரு­ப­வர்­கள் இனி காவல்­து­றையின் தடை­யில்லாச் சான்­றி­தழை தாக்கல் செய்­யத் தேவை இல்லை என அந்­நாட்டு அரசு முக்­கிய அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது.

இதன் மூலம் இந்­தி­யா­வில் இருந்து சவூ­திக்கு வேலைக்கு விண்­ணப்­பிப்­போ­ரின் காத்­தி­ருப்பு காலம் வெகு­வாக குறை­யும் எனக் கூறப்­ப­டு­கிறது.

கொரோனா நெருக்­க­டிக்­குப் பிறகு பல்­வேறு உலக நாடு­கள் விசா அளிப்­பது தொடர்­பான நடை­மு­றை­களை கடு­மையாக்கி வரு­கின்­றன. இந்­நி­லை­யில், சவூதி அரே­பி­யா­வுக்கு செல்­வ­தற்­காக விசா கோரி விண்­ணப்­பிக்­கும் இந்­தி­யர்­கள், காவல் துறை­யின் தடை­யில்லா சான்­றி­தழை அளிக்க வேண்­டி­ய­தில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது ­தொ­டர்­பாக டெல்­லி­யில் உள்ள சவூதி அரே­பிய தூத­ர­கம் அறிக்கை வெளி­யிட்­டுள்ளது. அதில் இந்­தி­யா­வுக்­கும் அந்­நாட்­டுக்­கும் இடையே வலு­வான நல்­லு­றவு இருந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ளது. சவூதி அரே­பி­யா­வில் சுமார் இரு­பது லட்­சத்­துக்­கும் அதி­க­மான இந்­திய குடி­மக்­கள் இருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அத்­தூ­த­ர­கம் அமைதி­யான முறை­யில் வாழும் இந்­திய குடி­மக்­க­ளின் பங்­க­ளிப்பை வர­வேற்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்ளது.

சவூதி அரே­பி­யா­வுக்கு வேலை வாய்ப்பு நிமித்­தம் செல்­லும் இந்­திய குடி­மக்­கள் காவல்­து­றை­யின் தடை­யில்லாச் சான்­றி­த­ழுக்­கா­க­வும் அதை தூத­ர­கத்­தில் தாக்­கல் செய்த பிற­கும் கணி­ச­மான நேரம் காத்­தி­ருக்க நேரி­டு­கிறது. இனி அந்­தக் காத்­தி­ருப்­புக்கு அவ­சி­யம் இல்லை என்­றும் விண்­ணப்­பங்­கள் அனைத்­தும் வேக­மா­கப் பரி­சீ­லிக்­கப்­பட்டு விசா விரைந்து வழங்­கப்­படும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சுற்­றுலா விசா­வுக்கு விண்ணப்பிக்­கக் கூடி­ய­வர்­களும் இது­போன்ற ஆவ­ணங்­களை தாக்­கல் செய்ய வேண்­டிய அவ­சி­யம் இல்லை என சவூதி அர­சாங்­கம் தனது அதி­கா­ர­பூர்வ டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டது.