காருக்குள் இளம்பெண் சீரழிப்பு: நால்வர் கைது

காருக்குள் இளம்பெண் சீரழிப்பு: நால்வர் கைது

1 mins read
be7701f0-5324-4107-be90-78b2f8810824
-

திரு­வ­னந்­த­பு­ரம்: ஓடும் காருக்­குள் வைத்து இளம்­பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­படுத்­திய சம்­ப­வம் கேரள மாநிலத்­தில் அதிர்ச்சி அலையை ஏற்­படுத்தி உள்­ளது.

அம்­மா­ண­விக்கு 19 வயது ஆகிறது என்­றும் இந்­தக் கொடூ­ரச் செய­லில் ஈடு­பட்ட நான்கு பேர் கைதாகி உள்­ள­னர் என்­றும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்றன.

பாதிக்­கப்­பட்ட இளம் பெண் காசர்­கோட்­டைச் சேர்ந்­த­வர் என்­றும் விளம்­ப­ரத்­து­றை­யில் பணி­யாற்றி வந்­த­வர் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

"அண்­மை­யில் ராஜஸ்­தா­னைச் சேர்ந்த தனது தோழி ஒரு­வ­ரு­டன் சேர்ந்து நண்­பர்­கள் ஏற்­பாடு செய்­த­தா­கக் கூறப்­படும் மது விருந்­தில் அந்­தப் பெண் பங்­கேற்­றுள்­ளார். அப்­போது மது போதை­யில் சிலர் இரு­வ­ரை­யும் காருக்­குள் வைத்து சீர­ழித்­துள்­ள­னர்.

அந்த இளம்பெண்ணை நெடுஞ்சாலை ஒன்றில் இறக்கி விட்ட பின்னர் அந்த நண்பர்கள் குழு தப்பியோடியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் ஒரு பெண் உட்பட நால்வர் கைதாகினர்.

நாடு முழுவதும் இத்தகைய வன்கொடுமைச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது.

இதையடுத்து இளம்பெண்ணை சீரழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.