செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
589f399d-85aa-48e2-9c28-39ef5d08d3d5
-

பெங்களூரில் ரூ.16,328 கோடி செலவில் மெட்ரோ ரயில் மூன்றாம் கட்ட பணி

பெங்களூரு: பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன என்றும் இப்பணிக்காக ரூ.16,328 கோடி ஒதுக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட பணிகளுக்கான திட்டத்தின் கீழ் 44.65 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப் படும் என்றும் இத்திட்டம் இருவழியில் அமல்படுத்தப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கான மொத்த செலவு கணக்கிடப்பட்டு, மத்திய, மாநில அரசுகள் அதில் தலா இருபது விழுக்காடு தொகையை வழங்கும்.

மீதமுள்ள 60 விழுக்காடு நிதி கடனாக பெறப்படும் என்றும் இத்திட்டத்திற்கு மொத்தம் 110 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேவைப்படும் நிலத்தில் சுமார் 85 விழுக்காடு மாநில அரசின் பங்கு என்றும் மீதமுள்ள நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்படும் என்றும் அந்நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளது.