இந்தியா செல்பவர்கள் இனி 'ஏர் சுவிதா' படிவங்களை நிரப்ப வேண்டியதில்லை

இந்தியா செல்பவர்கள் இனி 'ஏர் சுவிதா' படிவங்களை நிரப்ப வேண்டியதில்லை

1 mins read
8702b1f7-ba74-4759-9d32-64a3a80c6fbd
அக்டோபர் 20ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்கள். படம்: ஏஎஃப்பி -

இந்தியா செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி. 'ஏர் சுவிதா' படிவங்களை நிரப்பி அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் இனி அவர்களுக்கு இல்லை.

இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) முதல் இந்த மாற்றம் நடப்புக்கு வருகிறது. தங்களது சுகாதார நிலையையும் அண்மையில் மேற்கொண்ட பயண விவரங்களையும் 'ஏர் சுவிதா' படிவத்தில் இதுவரை பயணிகள் நிரப்பி வந்தனர்.

கொவிட்-19 தொற்று நிலவரம் மேம்பட்டுள்ளதாலும் இந்தியாவிலும் உலகளவிலும் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாலும் வழிகாட்டி நெறிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.