'குடும்ப வழிபாடு என் தம்பியை கைவிடவில்லை'

'குடும்ப வழிபாடு என் தம்பியை கைவிடவில்லை'

1 mins read
baaa9ba7-2b9c-41b1-b9a3-9c60861cf218
-
Google News Preferred Icon

பெங்களூரு: நாங்கள் வணங்கும் தெய்வம்தான் என் தம்பியைக் காப்பாற்றி இருக்கிறது என்று குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த ஆட்டோவை ஓட்டிய ஓட்டுநர் புருஷோத்தமனின் அண்ணன் கூறினார்.

மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவரது அண்ணன் நாகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடவுளுக்கு அலங்காரம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் சந்தனத்தை தயாரித்து எங்கள் குடும்பத்தினர் வழங்கி வருகிறோம். விபத்தில் இருந்து என் தம்பியையும் பேரழிவையும் நாங்கள் வணங்கும் கிராம தேவதை கள்தான் காப்பாற்றி உள்ளனர்.

"புருஷோத்தமன் ஓர் இதய நோயாளி. அவன் உயிர் தப்பி விட்டான். எனினும், அவன் ஆட்டோ சேதமடைந்துவிட்டது. அதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை," என்று வருந்தினார்.