மனதுக்குப் பிடித்தவரை மணந்ததால் மகளை சுட்டுக் கொன்றதாக தந்தை வாக்குமூலம்

புது­டெல்லி: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், மது­ரா­வில் யமுனா விரை­வுச்­சாலை அருகே ஒரு பெட்­டிக்­குள் வைத்து மூடப்­பட்ட நிலை­யில், உடலில் காயங்­க­ளு­டன் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இளம்­பெண் சடலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

அந்த உடல் யாரு­டை­யது, இந்­தக் கொலையைச் செய்­­தது யார் என 14 தனிப்­ப­டை­கள் அமைத்து விசா­ரணை நடந்து வந்தது.

இந்­நி­லை­யில், தந்­தையே மக­ளைக் கொன்று பெட்டிக்குள் அடைத்து சாலை­யோ­ரம் வீசிச் சென்றது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அதற்கு அந்­தப் பெண்­ணின் தாயும் உதவியுள்ளார்.

பெற்­றோர் கைதாகினர்.

"தங்­கள் மகள் ஆயுஷி, வேறு பிரிவைச் சேர்ந்த ஆடவரைத் திரு­ம­ணம் செய்­துகொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாததால் அவரை ஆண­வக் கொலை செய்­துள்­ள­னர்," என காவலர்கள் தெரி­வித்­த­னர்.

தெற்கு டெல்­லி­யில் உள்ள படர்­பூ­ரில் வசிக்கிறார் நித்­தேஷ் யாதவ். இவரது மகள் ஆயுஷி சவுத்ரி. பெற்­றோர், சகோ­த­ர­னோடு வசித்து வந்த ஆயுஷி, 22, டெல்லி கல்­லூரி யில் பட்டப்படிப்பு படித்து வந்­தார்.

ஆயுஷி தன் குடும்­பத்­தி­ன­ரி­டம் கூறா­மல் வேறு பிரி­வைச் சேர்ந்த சத்­ர­பால் என்பவரை திரு­மணம் செய்துகொண்டு, வீட்­டிற்குத் தெரி­யா­மல் வெளியே வசித்து வந்­துள்­ளார். இதனை அறிந்த பெற்­றோர் அவரைக் கண்­டித்­துள்­ள­னர்.

ஆயுஷி பிடிவாதத்தைக் கண்டு வெறுப்படைந்த நித்தேஷ், மகளின் திருமணம் பிடிக்காமல் சுட்டுக் கொன்றதாகக் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!