சரக்கு ரயில் தடம் புரண்டது: மூவர் பலி; 19 ரயில்கள் ரத்து

சரக்கு ரயில் தடம் புரண்டது: மூவர் பலி; 19 ரயில்கள் ரத்து

1 mins read
f6ccf557-456f-41c5-bd39-d864b2e4b815
தடம் புரண்ட சரக்கு ரயில். படம்: ஊடகம் -

புவனேஸ்வர்: ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு அதன் எட்டு பெட்டிகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தன. ஒரு பெட்டி மட்டும் ரயில் நிலையத்தின் பயணிகள் அமரும் பகுதியில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

ஒரு தாயும் மகளும் இறந்த நிலையில், அவா்களுடன் இருந்த இரண்டரை வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிா் தப்பியது.

பலத்த காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும், இந்தப் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் பகுதி யில் உள்ள கோரே ரயில் நிலையம் வழியாக சத்ரபூருக்குச் சென்று கொண்டிருந்த ரயில் அங்குள்ள சிறிய பாலத்தில் ஏறும்போது, ரயி லின் எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அங்கு இயக்கப் படும் 19 ரயில்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன என்றும் 20 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப் பட்டுள்ளன என்றும் இந்திய ரயில்வே கூறியது.

உயிரிழந்தவர்கள் குடும்பங் களுக்கு தலா ரூ 5 லட்சம் நிவா ரணமும் காயம் அைடந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

முதல்வர் நவீன் பட்நாயக் உயிரி ழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்ததோடு, இறந்தவர் களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்த வர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.