'குக்கர்' குண்டை வெடிக்க வைப்பதற்கு முன்பு ஒத்திகை பயிற்சி பயங்கரவாதிகள் தொடர்பு இருந்தது அம்பலம்: என்ஐஏ

'குக்கர்' குண்டை வெடிக்க வைப்பதற்கு முன்பு ஒத்திகை பயிற்சி பயங்கரவாதிகள் தொடர்பு இருந்தது அம்பலம்: என்ஐஏ

2 mins read
0c6ce0fd-ad85-4671-ab20-73eb32a5a664
ஐ.எஸ். அமைப்பினர்போல் உடையணிந்து, குக்கர் குண்டுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முகமது ஷாரிக். வலது படம்: மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

பெங்­க­ளூரு: மங்­க­ளூரு அருகே குக்­கர் குண்டு வெடித்த சம்­ப­வம் தொடர்­பில் கைதான முக­மது ஷாரிக், 24, ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­பின் தலை­வர்­க­ளு­டன் நேரடி தொடர்­பில் இருந்­ததை தேசி­யப் புல­னாய்வு முகமை (என்­ஐஏ) அதி காரி­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

அத்­து­டன், இந்­தக் குண்­டு­வெடிப்புச் சம்­ப­வத்தை நடத்­து­வதற்கு முன்­ன­தாக ஷாரிக் தனது நண்­பர்­கள் யாசின், மாஸ் ஆகிய இரு­வ­ரு­டனும் சேர்ந்து ஷிமோ­கா­வில் மக்­கள் நட­மாட்­டம் இல்­லாத பகு­தி­யில் குண்டை வெடிக்க வைத்து சோதனை செய்து பார்த்­த­தும் அதி­காரிகளின் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

அவர் குக்­கர் வெடி­குண்­டு­டன் பல காணொ­ளி­களை வெளி­யிட்டு பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வாக பேசி­யி­ருப்பதாகவும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கர்­நா­டக மாநி­லம், மங்­க­ளூரு அருகே கடந்த 19ஆம் தேதி­யன்று ஆட்டோவில் குக்­கர் குண்டு வெடித்­தது. இதனை வெடிக்­கச் செய்த ஷாரிக், மருத்­துவமனை­யில் 45 விழுக்­காடு காயங்களு­டன் சிகிச்சை பெற்­று­வ­ரு­கி­றார்.

இந்நிலையில், அவ­ரி­டம் நேற்று விசாரணையைத் தொடங்கி இருப்ப தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது­கு­றித்து கர்­நா­டக ஏடி­ஜிபி அலோக் குமார் மங்­க­ளூ­ரு­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறும்­போது, "பிட் காய்ன்' மூலம் ஷாரிக் பண உதவி பெற்று வந்­துள்­ளார். வெளி நாடு­களில் இருந்து அவ­ருக்கு கிடைத்­துள்ள உத­வி­கள் குறித்து பல்­வேறு குழுக்­கள் அமைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

"ஐ.எஸ். போன்ற அனைத்­து­லக பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளின் ஆத­ர­வா­ள­ரான ஷாரிக், சமூக வலைத்­த­ளங்­களிலும் தீவி­ர­மாக இயங்கி வந்­துள்­ளார்.

"பொறி­யி­யல் பட்­ட­தா­ரி­யான ஷாரிக், ஷிமோ­கா­வில் மிக­வும் அமை­தி­யான முறை­யில் ஜவுளி வியா­பா­ரம் செய்து வந்துள்ள நிலை யில், நாச­வே­லை­யில் ஈடுபட்டுள்ளது வெளிசத்துக்கு வந்துள்ளது," எனத் தெரிவித்தார்.