காற்பந்துப் போட்டியை ரசித்து மகிழ வீடு வாங்கிய 17 ரசிகர்கள்

காற்பந்துப் போட்டியை ரசித்து மகிழ வீடு வாங்கிய 17 ரசிகர்கள்

1 mins read
e1c9b6aa-083f-40ae-ada5-8d395053040f
காற்பந்துப் போட்டியை ரசிப்பதற்காக வீடு வாங்கிய 17 ரசிகர்களும் அவர்களது குழந்தைகளும். படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: உல­கக்­கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டியை எந்த ஒரு தொந்­த­ர­வும் இன்றி, பெரிய திரை­யில் ரசித்து மகிழ்­வ­தற்­காக ரூ.23 லட்­சம் பணம் கொடுத்து ஒரு வீட்டை 17 ரசி­கர்­கள் ஒன்­றி­ணைந்து வாங்­கி­யுள்­ள­னர்.

இந்­தி­யாவைப் பொறுத்­தவரையில், கேரளா, மேற்கு வங்­கம் ஆகிய இரு மாநி­லங்­க­ளி­லும் காற்­பந்துப் போட்டி மிக­வும் பிர­ப­லம்.

இந்­நி­லை­யில், மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்­மர் ஆகிய வீரர்­ க­ளின் 'கட் அவுட்'களையும் கேர­ளா­வில் வைத்து அசத்­தி­யுள்­ள­னர்.

அத்­து­டன், கொச்­சி­யில் உள்ள முண்­டக்­கா­மு­கல் கிரா­மத்­தில் வசிக்­கும் 17 ரசி­கர்­கள் சேர்ந்து ரூ.23 லட்­சத்­தில் வீடு வாங்­கி­யுள்­ள­னர்.

அந்த வீட்­டிற்கு அர்­ஜெண்­டினா, பிரே­சில், போர்ச்­சு­கல் அணி­க­ளின் நிறங்­களில் சாய­மும் அடித்­துள்­ள­னர்.

அனை­வ­ரும் ஒன்றாகப் போட்­டியைக் காணும் வகை­யில் வீட்­டில் பெரிய திரை கொண்ட தொலைக்­காட்சிப் பெட்டியும் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

தங்­க­ளுக்­குப் பின்­னர் அடுத்­த­டுத்த தலை­மு­றை­யி­ன­ரும் இவ்­வீட்­டில் காற்­பந்­துப் போட்­டி­க­ளைப் பார்க்­க­லாம் என்­றும் அவர்­கள் நெகிழ்ச்­சி­யு­டன் கூறு­கின்­ற­னர்.

"2022 காற்பந்துப் போட்டியை மனதுக்கு நெருக்கமானதாகவும் மறக்கமுடியாத வகையிலும் மாற்றவே இம்முடிவை எடுத்தோம்," என்கின்றனர் ரசிகர்கள்.