விமானத்தில் இருமுடி பைகள் கொண்டு செல்ல அனுமதி

விமானத்தில் இருமுடி பைகள் கொண்டு செல்ல அனுமதி

1 mins read
702baca1-70f2-4e09-bf42-aa10232dd203
-
Google News Preferred Icon

புதுடெல்லி: சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானங்களில் தங்களது இருமுடி பைகளை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இருமுடி பைகளில் தேங்காய்கள் கொண்டு செல்லப்படும் என்பதாலும் தேங்காய்கள் எரியும் தன்மை கொண்டவை என்பதாலும் தடை விதிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், பாது காப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளர்வுகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இனி இருமுடி பைகளை பக்தர்கள் தங்களது கைப்பைகளிலேயே கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.