நான்கு மாநிலங்களில் தட்டம்மை பாதிப்பு

புது­டெல்லி: நாட்­டின் பல்­வேறு பகுதி­களில் தட்­டம்மை பாதிப்பு அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கு மத்­திய அரசு சுகா­தார குழுக்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

கொரோனா நெருக்­கடி குறைந்து வரு­வ­தால் மக்­கள் நிம்­மதி அடைந்­துள்ள நிலை­யில், தட்­டம்மை பரவல் புதிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.

கேரளா, குஜ­ராத், ஜார்க்­கண்ட், மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளி­ல் தட்­டம்­மை­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. உயி­ரி­ழப்­பும் ஏற்­ப­டத் தொடங்கி உள்­ளது.

குறிப்­பாக, குழந்­தை­கள் இடையே தட்­டம்மை பாதிப்பு அதி­கரித்­துள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட இடங்­களில் ஆய்வு மேற்­கொண்டு, உட­ன­டி­யா­க ­பா­திப்பைக் குறைக்­கும் வகை­யில் உரிய நட­வடிக்­கை­களை மேற்­கொள்ள ஏது­வாக மத்­திய அரசு சிறப்­புக் குழுக்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

மேற்­கு­றிப்­பிட்ட மாநி­லங்­களில் உள்ள மும்பை, மலப்­பு­ரம், அக­மதா­பாத், ராஞ்சி ஆகிய நக­ரங்­களில் தட்­டம்மை பாதிப்பு எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­வ­தாக மாநில அர­சு­கள் தெரி­வித்­துள்­ளன.

இதை­ய­டுத்து அந்­ந­க­ரங்­க­ளுக்கு மத்­திய அரசு அனுப்­பி­யுள்ள குழுக்­களில் மருத்­து­வர்­கள், சுகா­தார நிபு­ணர்­கள் உள்­ளிட்­டோர் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இந்­தக் குழுக்­க­ளு­டன், கேரளா, குஜ­ராத், ஜார்க்­கண்ட் மாநி­லங்­களில் உள்ள சுகா­தார, குடும்­ப­நல மண்­டல அலு­வ­ல­கத்­தின் முது­நிலை மண்­டல இயக்­கு­நர்­கள் இணைய உள்­ள­னர். மத்­திய அர­சின் குழுக்­களைத் தொடர்புகொண்டு மாநில அர­சின் அதி­கா­ரி­களும் ஒருங்­கிணைந்து செயல்­பட உள்­ள­னர்.

ஆய்வு குறி்த்த தக­வல்­களை அவ்­வப்­போது பெற்று, அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து மாநில அர­சு­களும் திட்­ட­மிட உள்­ளன.

மத்­திய அர­சின் குழுக்­கள் சம்பவ பகு­தி­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று பார்­வை­யிட உள்­ள­தா­க­வும் பொது சுகா­தார அம்­சங்­கள், வழி­காட்டி நெறி­மு­றை­களை வகுத்­தல் குறித்து மாநில அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­கள் வழங்­கப்­படும் என்­றும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, மும்­பை­யில் மட்டும் புதி­தாக மேலும் முப்­பது பேருக்கு தட்­டம்மை பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தற்­போது மும்­பை­யில்­தான் தட்­டம்மை பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. அங்கு இது­வரை 12 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். புதி­தாக பாதிக்­கப்­பட்ட 30 பேரில் ஒரு­வர் இறந்­து­விட்­ட­தாக மாவட்ட நிர்­வா­கம் தெரி­வித்­தது.

மும்­பை­யில் மட்­டும் இது­வரை 233 பேருக்கு தட்­டம்மை பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இப்­பாதிப்பு கார­ண­மாக எட்டு மாத பச்­சி­ளங் குழந்­தை­யும் உயி­ரி­ழந்­தது சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!