போபால்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப்பயணத்தில் அவரது சகோதரி சோனியா காந்தியும் பங்கேற்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் தலைமை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
'இணைந்து நடந்தால் வலிமை அதிகம்' என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டமப்பர் 7ஆம் தேதி தமது 'இந்திய ஒற்றுமை' நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல், இப்போது மத்திய பிரதேசம் சென்றுள்ளார். அங்கு அவரது நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி, அவரது கணவர், மகன் ஆகிய மூவரும் பங்கேற்றனர்.
தமது பயணத்தின்போது பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்குப் பாஜகவும் பதிலடி தந்து வருகிறது.

