86 ரவுடிகளின் வீடுகளில் காவல்துறை திடீர் சோதனை

86 ரவுடிகளின் வீடுகளில் காவல்துறை திடீர் சோதனை

1 mins read
de4aede7-b553-482b-a3cb-13af95540f3c
-

பெங்­க­ளூரு: தேர்­த­லில் போட்­டி­யிடத் திட்­ட­மிட்­டி­ருந்த ரவு­டி­க­ளின் வீடு­களில் பெங்­க­ளூர் காவல்­துறை அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது.

இதை­ய­டுத்து 28 பேரை விசா ரணைக்­காக தடுத்து வைத்­தி­ருப்ப தாக­வும் மற்ற அனை­வ­ரும் தீவிர கண்­கா­ணிப்பு வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­க­வும் காவல்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

பெங்­க­ளூரு மாந­க­ராட்­சிக்கு அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் தேர்­தல் நடை­பெ­றும் என எதிர் பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், அத்­தேர்­த­லில் போட்­டி­யிட பல ரவுடி­கள் திட்­ட­மிட்டுள்­ள­தா­க­வும் குறுகிய கால அவ­கா­சத்­துக்­குள் தங்­களை அர­சி­யல் பிர­மு­கர்­க­ளாக வளர்த்­துக்கொள்ள விரும்­பியதாக­வும் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்தே 86 ரவு­டி­க­ளின் வீடு­களில் இந்த திடீர் சோதனை நடத்­தப்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

சோத­னை­யின்­போது பல்­வேறு ஆயு­தங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட் டன. பயங்­கர ஆயு­தங்­க­ளைப் பதுக்கி வைத்­தி­ருந்த ரவு­டி­கள் மட்டுமே விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அடுத்த சில தினங்­க­ளுக்கு இந்த சோதனை, கைது நட­வடிக்கை நீடிக்­கும் என பெங்­க­ளூரு காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.