சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நான்கு இளம் பெண்கள் தம்மைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக ஆடவர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு ஜலந்தர் நகரில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, தம்மை நோக்கி வேகமாக வந்த காரில் இருந்து இருபது வயது மதிக்கத்தக்க நான்கு இளம் பெண்கள் இறங்கிய தாகவும் தம்மிடம் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி எங்குள்ளது என்று விசாரித்ததாகவும் அந்த ஆடவர் கூறியுள்ளார்.
"துண்டுச்சீட்டை பார்த்துக் கொண்டிருந்த போது, இளம்பெண்களில் ஒருவர் என் கண்களில் ரசாயனம் கலந்த திரவத்தை தெளித்ததில் மயக்கமடைந்தேன்.
"பின்னர் ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்ற பிறகுதான் கண்விழித்தேன். அங்கு அப்பெண்கள் மது அருந்தினர். கை, கால்களைக் கட்டிப்போட்டு என்னையும் கட்டாயப் படுத்தி குடிக்க வைத்தனர்.
"அதன் பிறகு போதையிலேயே என்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், மறுநாள் அதிகாலை மூன்று மணியளவில் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு புறநகர்ப் பகுதியில் இறக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்," என அந்த ஆடவர் காவல்துறையில் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

