குக்கர் குண்டு: புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

குக்கர் குண்டு: புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

2 mins read
e7bb1629-6970-4b55-ac10-318b04fce427
-

பெங்­க­ளூரு: மங்­க­ளூரு ஆட்டோ குண்டு ெவடிப்பு சம்­ப­வத்­துக்கு 'அடக்­கு­மு­றைக்கு எதி­ரான இஸ்­லா­மிய அமைப்பு' என்ற புதிய அமைப்பு பொறுப்­பேற்­றுள்­ளது. மேலும், இந்தச் சம்­ப­வம் தொடர்­பாக அந்த அமைப்பு அரபு மொழி­யில் சமூக ஊட­கங்­களில் ஓர் அறிக்­கையை பதிவு செய்துள்­ளது.

மங்­க­ளூ­ரில் அண்­மை­யில் ஆட்டோ­வில் கொண்டு செல்லப்­பட்ட குக்­கர் வெடி­குண்டு வெடித்த சம்­ப­வம் பயங்­க­ர­வாத செயல் என கர்­நா­டக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து இவ்­வ­ழக்கு விசா­ரணை தேசிய புல­னாய்வு முக­மை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக மேலும் பல அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன. கத்ரி மஞ்­சு­நா­தர் கோவில் உட்­பட மூன்­று­கோ­வில்­களில் தாக்­கு­தல் நடத்த ஷாரிக் திட்­ட­மிட்­டி­ருந்­தது இப்­போது உறு­தி­யாகி உள்­ளது.

ஆண்டு இறு­தி­யில் கட­லோர மாவட்­டங்­களில் உள்ள முக்­கிய கோவில்­களில் லட்­ச­தீப உற்­ச­வம் நடக்­கும். இதில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் பங்­கேற்­பது வழக்­கம் என்­ப­தால் அச்­ச­ம­யம் தாக்­கு­தல் நடத்த பயங்­க­ர­வா­தி­கள் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

இதற்­கி­டையே, மங்­க­ளூ­ரு­வில் கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை பங்­கேற்க இருந்த கூட்­டத்­தில் வெடி­குண்டு வைக்க ஷாரிப் தரப்­பி­னர் திட்­ட­மிட்டு இருந்­தது அம்­ப­ல­மாகி உள்­ளது.

எனி­னும் முதல்­வர் பச­வ­ராஜ் கடைசி நேரத்­தில் கூட்­டத்­தில் பங்­கேற்­க­வில்லை. இதற்­கி­டையே துபா­யைச் சேர்ந்த சில அமைப்பு­க­ளு­டன் ஷாரிக் தொடர்­பில் இருந்­துள்­ளார் என்­றும் அவற்­றுள் சில பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

ஷாரிக்­கிற்கு உதவியாக இருந்த அப்­துல் மதீன், பத் அலி ஆகி­யோரை தேடும் நட­வ­டிக்கை தீவி­ர­ம­டைந்­துள்ளது. இரு­வ­ருக்­கும் பங்­ளா­தே­ஷில் உள்ள ஒரு தீவி­ர­வாத அமைப்­பு­டன் நேர­டித் தொடர்­புள்­ளது விசாரணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­யடுத்து, தலை­ம­றை­வாக இருக்­கும் இரு­வ­ரை ­யும் அடை­யா­ளம் காட்­டு­வோ­ருக்கு ரூ.5 லட்­சம் பரிசு வழங்­கு­வ­தாக தேசிய புல­னாய்வு முகமை அறி­வித்­துள்­ளது.