இந்தியாவின் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள 'விழிஞ்சம் சீபோர்ட்' துறைமுகத்தில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க அதானி குழுமத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சனிக்கிழமை மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
US$900 மில்லியன் மதிப்பிலான திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த நான்கு மாதங்களாக திட்டத்தின் கட்டுமானம் நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு அதானி குழுமம் இன்று சனிக்கிழமை முதல் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்தது.
அதன்படி, 'அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்இஇசட் பிரைவேட் லிமிடெட்' வாயில் அருகே இரண்டு டசன் லாரிகள் பாறாங்கற்களை ஏற்றிச் சென்றன.
அப்போது, கத்தோலிக்க திருச்சபையின் தலைமையில் மீனவர்கள் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


