தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொது சிவில் சட்டம்: பொம்மை ஆதரவு

1 mins read
129f254a-2ab7-4e99-bf5f-5fdf5dddd5cc
-

பெங்­க­ளூரு: பொது சிவில் சட்­டம் குறித்து வெளிப்­ப­டை­யான விவா­தம் நடத்­தப்­பட்டு, அதன் அடிப்­ப­டை­யில் அச்­சட்­டம் இயற்­றப்­பட வேண்­டும் என கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை வலி­யு­றுத்தி உள்­ளார்.

கர்­நா­ட­கா­வில் பொது சிவில் சட்­டத்தை கொண்டு வரு­வது தொடர்­பாக தீவிர ஆலோ­சனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நாடு தழு­விய அள­வில் பொது சிவில் சட்­டம் கொண்டு வரப்­பட வேண்­டும் என்­பதே பாஜ­க­வின் திட்­டம். இது தொடர்­பாக பல்­வேறு மாநி­லங்­கள் குழுக்கள் அமைத்­துள்­ளன.

"பொது சிவில் சட்­டம் அனை­வ­ரும் விரும்­பக்­கூ­டி­ய­தா­கவே இருக்­கும். எனவே அதனை அமல்­ப­டுத்தத் தேவை­யான அனைத்து வகை ஆலோ­ச­னை­களும் ஆய்­வு­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.

"மத்திய அரசு இது தொடர்பாக உரிய ஆலோசனைகளை மேற் கொண்டு இருப்பதை ஏற்கெனவே தெரிவித்துள்ளது," என்­றார் முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை.

இதற்கிடையே இந்தச் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இச் சட்டத்தால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என அவை கூறியுள்ளன.