'இந்தியாவுடன் உலக நாடுகள் இணைந்துள்ளன'

'இந்தியாவுடன் உலக நாடுகள் இணைந்துள்ளன'

1 mins read
ded48963-8ac8-4a4f-b099-83e4b5efcb7e
-

மும்பை தாக்குதல் நினைவுநாளில் ஜெய்சங்கர்:

புதுடெல்லி: பயங்­க­ர­வா­தம் மனித குலத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக உள்­ளது என மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் (படம்) தெரிவித்­துள்­ளார்.

மும்பை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல் நினைவு நாளை­யொட்டி சமூக ஊட­கத்­தில் பதி­விட்­டுள்ள அவர், அத்­தாக்­கு­த­லில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை நினை­வு­கூர்­வ­தில் உலக நாடு­கள் இந்­தி­யா­வு­டன் இணைந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"மும்பை பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லுக்­குத் திட்­ட­மிட்­ட­வர்­களும் அத்­தாக்­கு­தலை மேற்­பார்வை செய்­த­வர்­களும் நீதி­யின் முன் கொண்டு வரப்­பட வேண்­டும்.

"உல­கம் முழு­வ­தும் பயங்­க­ர­வா­தத்­திற்கு இலக்­காகி பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்­கும் கைமா­றாக இந்த நட­வடிக்­கையை மேற்­கொள்ள வேண்­டும்," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

இதற்­கி­டையே, சீனா உட­னான உறவு குறித்து கருத்து தெரி­வித்­துள்ள அவர், இந்­தியா உறு­தி­யாக இருக்க வேண்­டிய நேரத்­தில் உறு­தி­யாக இருப்­பதே சீனாவை கையா­ளு­வ­தற்­கான சரி யான நட­வ­டிக்­கை­யாக இருக்க முடி­யும் என்­றார்.

"நம் நாட்டு நல­னில் அவர்­கள் அக்­கறை காட்­டாத போது, நம் படை­களை முன்­னோக்கி நகர்த்­து­வ­தில் உறு­தி­யாக இருப்­போம். எப்­போ­தும் இதே­போல நடந்­து­கொள்ள முடி­யாது.

"எங்­கெங்கு எப்­படி நடந்து கொள்ள வேண்­டும் என்ற வரை­முறை உள்­ளது," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.

கடந்த 2020 முதல் எல்­லை­யில் பெரும் படை­களை குவித்து, அதை பரா­ம­ரிப்­பது அவ்­வ­ளவு எளி­தான செயல் அல்ல என்று குறிப்­பிட்­டுள்ள அவர், சீன விவ­கா­ரத்­தில் இந்­திய அரசு உறு­தி­யான நிலைப்­பாட்டை கொண்­டுள்­ளது என்­றார்.