கிரண்: நீதி உறுதி செய்யப்படுவதில் மொழி ஒரு தடையாக உள்ளது

கிரண்: நீதி உறுதி செய்யப்படுவதில் மொழி ஒரு தடையாக உள்ளது

1 mins read
3867c117-5f42-4372-bd65-cd033fdc4c72
-

புது­டெல்லி: நீதி உறுதி செய்­யப்­ப­டு­வ­தில் மொழி என்­பது ஒரு தடை­யாக உள்­ளது என மத்­திய சட்ட அமைச்­சர் கிரண் ரிஜிஜூ தெரி­வித்­துள்­ளார்.

அர­சி­யல் சாசன தினத்­தை­யொட்டி நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய அவர், இந்த நாளில் டாக்­டர் அம்­பேத்­கார் கூறிய பல்­வேறு விஷ­யங்­களை நினை­வு­கூர்­வது சரி­யாக இருக்­கும் என்­றும் சுதந்­தி­ரம் மக்­கள் மீது மிகப்­பெ­ரிய பொறுப்­பு­க­ளைச் சுமத்தி இருக்­கிறது என்றும் அவர் கூறினார்.

"இந்­தப் பொறுப்பை நாம் மறந்து­வி­டக் கூடாது. சுதந்­தி­ரம் பெற்­ற­த­னால், ஏதே­னும் தவறு நடந்­தால், அதற்கு பிரிட்­டி­ஷ் மக்களைக் குற்­றம் சொல்­லும் வாய்ப்பை நாம் இப்­போது இழந்து விட்­டோம் என்று எச்­ச­ரிக்கை செய்­யும் வகை­யில் அம்­பேத்­கார் கூறி­யுள்­ளார்," என்­றார் அமைச்­சர் கிரண் ரிஜிஜூ.

இந்­தியா போன்ற பரந்த நாட்­டில், மொத்த மக்­கள் தொகை­யில் 65% பேர், இன்­னும் கிரா­மப்­பு­றங்­களி­லேயே வசிப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், அனைத்­தை­யும் புரிந்து கொள்­வ­தற்கு ஏற்ப வட்டார, உள்­ளூர் மொழியே அவர்­கள் இடையே பயன்­பாட்­டில் உள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"நாட்­டில் சட்டத் தகவல்கள், சட்­ட­பூர்வ தனி வகைச் சொற்­கள், தொடர்­கள் ஆகி­யவை அனைத்­துத் தரப்பு மக்­களும் புரிந்துகொள்­ளக் கூடிய உள்­ளூர் மொழி­யில் கிடைப்­ப­தில்லை.

"இத­னால், அனை­வ­ருக்­கும் பொது­வான நீதி கிடைப்­பது உறுதி செய்­யப்­ப­டு­வ­தற்­கான தடை­களில் ஒன்­றாக மொழி உள்­ளது," என்றார் அமைச்­சர் கிரண் ரிஜிஜூ.