டெல்லி அரசு மீது ரூ.1,300 கோடி ஊழல் புகார்

டெல்லி அரசு மீது ரூ.1,300 கோடி ஊழல் புகார்

1 mins read
a6900c69-4ab3-455c-afbd-828ed8421f74
-

புதுடெல்லி: அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ஆம் ஆத்மி அரசில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து 'சிறப்புப் புலனாய்வு அமைப்பு' விசாரணை நடத்த வேண்டும் என மத்திய லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கூறியுள்ள நிலையில், அவ்வாறு ஏதுமில்லை என பாஜக தெரிவித்துள்ளது.