மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவ குற்றவாளி ஏகே 47 துப்பாக்கி தயாரிக்க முயற்சி

மங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவ குற்றவாளி ஏகே 47 துப்பாக்கி தயாரிக்க முயற்சி

2 mins read
9a88ab01-fc1f-4dc0-bb15-4b405a6bba85
-

பெங்­களூரு: மங்­க­ளூரு ஆட்டோ குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வத்­தில் முக்­கிய குற்­ற­வா­ளி­யாக அடையா­ளம் காணப்­பட்­டுள்ள முக­மது ஷாரிக் தொடர்­பாக பல்­வேறு திடுக்­கி­டும் தக­வல்­கள் தொடர்ந்து வெளி­யான வண்­ணம் உள்­ளன.

இந்­நி­லை­யில், ஷாரிக் ஏகே 47 ரக துப்­பாக்­கி­களைத் தயா­ரிக்க முயன்­றது தெரி­ய­வந்­துள்­ளது.

பல்­வேறு பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டன் ஷாரிக் தொடர்­பில் இருந்து வந்­துள்­ளான். கடந்த எட்டு மாதங்­களில் மட்­டும், அந்த அமைப்­பு­க­ளு­டன் ஷாரிக் 189 முறை தொடர்பு கொண்­டது தெரி­ய­வந்­துள்­ளது. மேலும், இணை­யத்­த­ளம் மூலம் ஏகே 47 வகை துப்­பாக்­கி­களைத் தயா­ரிக்க முயற்சி செய்­துள்ள ஷாரிக், அதற்­குத் தேவை­யான பொருள்­கள் அனைத்­தை­யும் இணை­யம் வழி வாங்­கி இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது.

இந்­தி­யா­வில் தடை செய்­யப்­பட்­டுள்ள இஸ்­லா­மிக் ஆய்வு மன்­றம் (ஏஆர்­எப்) என்ற அமைப்­பு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்து வந்­துள்ள ஷாரிக், வாட­கைக் கார் சேவை­யைப் பயன்­ப­டுத்தி பல்­வேறு இடங்­க­ளுக்­குச் சென்று வந்­தது தெரி­ய­வந்­தி­ருப்­ப­தாக விசா­ரணை அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

தமது சதி வேலை­க­ளுக்­குத் தேவை­யான பொருள்­களை எந்­த­வித சந்­தே­கத்­துக்­கும் இடம்­கொ­டுக்­காத வகை­யில் சிறிது சிறி­தாக வாங்­கிச் சேக­ரித்­துள்ள ஷாரிக், மைசூ­ரு­வில் தங்கி இருந்த போது, பெட்­டிக் கடை ஒன்­றில் ஒரே சம­யத்­தில் 100 தீப்­பெட்­டி­கள் வாங்­கி­ய­போது கடைக்­கா­ரர்­கள் சந்­தே­க­ம­டைந்­துள்­ள­னர். எதற்­காக இவ்­வ­ளவு தீப்­பெட்­டி­கள் என்று கேட்­ட­போது, பிள்­ளை­கள் பள்­ளி­யில் 'புரா­ஜக்ட்' மேற்­கொள்­வ­தற்கு தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, ஷாரிக்­கு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் குறித்து தமி­ழ­கத்­தி­லும் கேர­ளா­வி­லும் கர்­நா­டக காவல்­து­றை­யி­னர் முகா­மிட்டு தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். ஷாரிக் பெரும்­பா­லும் கோவை, கேர­ளா­வைச் சேர்ந்த சில­ரது கைபேசி எண்­க­ளுக்­குத்­தான் அடிக்­கடி பேசி­யுள்­ளார் என்­றும் எந்­தெந்த பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டன் அவர் நெருக்­க­மாக இருந்­தார் என்­பது விரை­வில் தெரிய வரும் என்­றும் காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.