குஜராத்தில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்

குஜராத்தில் அனல் பறக்கும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம்

2 mins read
c981ee29-3c36-417d-9732-b30ad0e85fa8
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கருத்துக்கணிப்பு களை மீறி ஆம் ஆத்மி கட்சியால் அதிக தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாஜக தலைவர்களும் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி உள்ளனர். இதனால் தேர்தல் களத்தில் இறுதிவரை அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு ஏற்பட்டதாக அரசியல் களப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: குஜ­ராத் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­கான இறு­திக்­கட்­டப் பிர­சா­ரத்­தில் அனல் பறந்­தது. இந்­நி­லை­யில், பாஜக வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யில் பல்­வேறு வாக்­கு­று­தி­களும் இல­வ­சங்­களும் நிறைந்­தி­ருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இம்­முறை பாஜக, காங்­கி­ரஸ், ஆம் ஆத்மி கட்­சி­க­ளுக்கு இடையே மும்­மு­னைப் போட்டி நில­வு­கிறது.

இந்­நி­லை­யில் பாஜக வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யில், கல்­லூரி மாண­வி­க­ளுக்கு இல­வச இரு­சக்­கர வாக­னம் அளிக்­கப்­படும் என்­றும் பொது சிவில் சட்­டம் அமல்­ப­டுத்­தப்­படும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயி­லும் மாண­வர்­க­ளுக்கு இல­வச மிதி­வண்டி வழங்­கப்­படும் என்­றும் பெண்­கள் இல­வ­சப் பேருந்­துப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்­றும் பாஜக தேர்­தல் வாக்­கு­றுதி அளித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஆம் ஆத்மி கட்­சித் தலை­வர் கெஜ்­ரி­வால் மேற்­கொண்ட பிர­சா­ரம் வெற்­றிக்கு கைகொ­டுக்­கும் என அக்­கட்­சி­யினர் தெரி­வித்­துள்­ள­னர்.

27 ஆண்­டு­க­ளாக குஜ­ராத்­தில் பாஜ­க­வின் ஆதிக்­கம் அதி­க­ரித்­துள்ள போதி­லும், இம்­முறை ஆம் ஆத்மி வெற்றி பெறும் என டெல்லி முதல்­வ­ரு­மான கெஜ்­ரி­வால் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, காங்­கி­ரஸ் கட்­சி­யின் இறு­திக்­கட்­டப் பிர­சா­ரம் கிரா­மப்­பு­றங்­க­ளைக் குறி­வைத்து மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

குஜ­ராத் மாநில சட்­டப்­பே­ர­வைக்கு டிசம்­பர் 1, 5ஆம் தேதி­களில் இரண்டு கட்­டங்­க­ளாக தேர்­தல் நடை­பெ­று­கிறது.

இந்­நி­லை­யில், ஆட்­சி­யைத் தக்­க­வைக்க பாஜக தீவிர பிர­சா­ரம் மேற்­கொண்­டுள்­ளது.

தனது சொந்த மாநி­லம் என்­ப­தால் பிர­த­மர் மோடி­யும் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வும் பல கட்­டங்­க­ளாக பிர­சா­ரம் மேற்­கொண்டு வாக்கு வேட்­டை­யா­டி­னர்.

அண்­மை­யில் ஒரே நாளில் நான்கு பிர­சா­ரப் பொதுக்­கூட்­டங்­களில் பங்­கேற்­றார் பிர­த­மர் மோடி.

இம்­முறை ஆம் ஆத்­மி­யின் செல்­வாக்கு கூடி­யி­ருப்­ப­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

ஆம் ஆத்மி கட்­சி­யி­னர் பிர­சா­ரத்­தின்­போது நகர்ப்­பு­றங்­களில் கூடு­தல் கவ­னம் செலுத்­தி­ய­தா­கத் தெரி­கிறது.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என மூன்று கட்சிகளும் உறுதியளித்துள்ளன.