'ரூபாய் மதிப்பு வலுவடையும்'

'ரூபாய் மதிப்பு வலுவடையும்'

1 mins read
6f517f2b-6e29-482e-aa62-3b9588a0f8db
-

புதுடெல்லி: அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் வேகத்தைக் குறைக்கும் சூழலில், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் என பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ள அமெரிக்காவைச் சோ்ந்த டக்லஸ்.டபிள்யூ.டைமண்ட் தெரிவித்துள்ளாா்.

டிசம்பர் 10ல் இவர் நோபல் பரிசைப் பெறவுள்ளார். "வட்டி விகிதத்தை எதிா்பாராத வகையில் அமெரிக்கா உயா்த்தும்போதெல்லாம் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வட்டி விகிதம் உயர்வது குறைந்த வுடன் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும்," என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய டக்லஸ்.டபிள்யூ. டைமண்ட் தெரிவித்தாா்.