தந்தையைக் கூறுபோட்ட தாயும் மகனும்

தந்தையைக் கூறுபோட்ட தாயும் மகனும்

1 mins read
af8b8da8-4777-4cac-a9e1-03c68369b668
-

புதுடெல்லி: அண்மையில் டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை அவரது காதலர் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூரம் நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில், இப்போது அதே போன்று நடந்துள்ள மற்றொரு சம்பவம் டெல்லி மக்களை பயத்தில் அலற வைத்துள்ளது.

அஞ்சன்தாஸ் என்பவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்த தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மனைவி, மகனின் உதவி யுடன் அவரைக் கொன்று 22 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார்.

டெல்லியில் உள்ள பாண்டவ் நகரில் கணவரைக் கொலை செய்த தாக பெண்ணையும் அவரது மக னையும் டெல்லி குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர். கணவரைக் கொன்று உடலைப் பல துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அருகில் உள்ள நிலப் பகுதிகளில் வீசியுள்ளனர். இது அருகே இருந்த சிசிடிவி கேமராக் களில் பதிவாகியுள்ளது.

பூனமும் அவரது மகன் தீபக்கும் அஞ்சன்தாசுக்கு தூக்க மாத்திரை களைக் கொடுத்து கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.