தாயின் கவலை போக்க நான்கு ஆண்டுகளாக 60,000 கி.மீ. தூரம் சுற்றி வரும் மகன்

ஸ்ரீவில்­லி­புத்­தூர்: தன் தாயின் துயர், மன உளைச்­சல், தனிமையைப் போக்­கு­வ­தற்­காக அவரை கடந்த நான்கு ஆண்டுகளாக மோட்­டார் சைக்­கி­ளில் ஏற்­றிக்­கொண்டு, ஊர் ஊராக அழைத்­துச்­சென்று தேவா­ல­யங்­கள், கோயில்­கள், மசூ­தி­க­ளைச் சுற்­றிக் காண்­பித்து மகிழ்ச்­சிப்­படுத்தி வரு­கி­றார் மகன் ஒரு­வர்.

"தாய்-மக­னின் பாசத்தை திரைப் ­ப­டங்­க­ளி­லும் கதை­க­ளி­லும் கேட்­டுள்­ளோம். ஆனால், இப்­போ­து­தான் நேரில் காண்­கின்­றோம்," என்று இந்தத் தாய்-மகன் ஜோடியை பல­ரும் வியந்து பாராட்டுகின்­ற­னர்.

ஆந்­திரா, மகா­ராஷ்­டிரா, கேரளா, சத்­தீஸ்­கர், உத்­த­ரப் பிர­தே­சம், கோவா, புதுச்­சேரி, தமிழ்­நாடு என இது­வரை 60,459 கிலோ ­மீட்­டர் தூரத்­திற்கு இவர்­கள் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணம் செய்து நேற்று முன்தினம் ஸ்ரீவில்­லி­புத்­தூர் ஆண்­டாளைத் தரிசித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று கோவில்பட்டி வழியே ராமேஸ்வர பயணத்தைத் தொடங்கினர்.

கர்­நா­டக மாநி­லம், மைசூரு அருகே உள்ள போகடி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் கிருஷ்­ண­கு­மார், 45, இவ­ரது தாய் ரத்­தி­னம்மா, 74. வங்­கி­யில் பணி­யாற்றி வந்த இவ­ரது தந்தை தட்­சி­ணா­மூர்த்தி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்­து­விட்­டார். அன்றுமுதல் ரத்­தி­னம்மா மன­மு­டைந்து போனார். அவரது தனிமையைப் போக்கவும் மன அழுத்­தத்­தில் இருந்து அவரை வெளியே கொண்­டு­வரவும் தன் அப்பாவின் மோட்டார் சைக்கிளில் அம்மாவை கோயில் குளங்களுக்கு அழைத்­துச் செல்ல கிருஷ்­ண­கு­மார் முடிவு செய்­தார்.

இதையடுத்து, மென்பொருள் நிறுவன அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த இவர், தனது வேலையை விட்டு விலகி, ரத்­தி­னம்­மா­ளு­டன் ஆந்­திரா, கேரளா, தமிழ்­நாடு உள்­ளிட்ட பல மாநி­லங்­களில் உள்ள புகழ்­பெற்ற கோவில்­கள், தேவா­ல­யங்­கள், மசூ­தி­க­ளுக்­குச் சென்று வழி­பாடு செய்து வருகிறார்.

இது­கு­றித்து ரத்­தி­னம்மாள் கூறு­கை­யில், "இதுவரை 60,459 கிலோ­மீட்­டர் பய­ணம் செய்து இந்­தி­யா­வில் உள்ள பல்­வேறு தலங்­க­ளிலும் வழி­பாடு செய்ததால் மனம் நிறை வாக, நிம்மதியாக உள்ளது. காசி யில் இருந்து கொண்டுவந்த கங்கை தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்தபின் மைசூர் திரும்­பு­வோம்.

"மாத்ரு சேவா சங்கல்ப புனித யாத்திரை' மூலம் இந்தியா, நேப் பாளம், பூட்டான், மியன்மார் உள் ளிட்ட நாடுகளையும் எனது மகனு டன் சேர்ந்து சுற்றி வந்துள்ளேன். இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்?" என்­கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!