456 கோடீஸ்வர வேட்பாளா்கள்

456 கோடீஸ்வர வேட்பாளா்கள்

1 mins read
5bfb62ec-cffd-4975-877f-8306bc2da231
-

காந்­தி­ந­கர்: டிசம்பர் 1, 5ஆம் தேதியன்று நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளா்களில் 456 போ் கோடீஸ்வரா்கள் என ஜனநாயக சீா்திருத்தச் சங்கம் (ஏடிஆா்) எனும் தனியாா் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 456 போ் கோடீஸ்வரா்கள். இவர்களில் பாஜகவின் 154 வேட்பாளா்கள், காங்கிரசின் 142 வேட்பாளா்கள், ஆம் ஆத்மி கட்சியின் 68 வேட்பாளர்கள் அடங்குவர்.

இவா்களில் பாஜகவைச் சோ்ந்த ஜெயந்தி படேல் என்ற வேட்பாளர் ரூ.661 கோடி சொத்துகளுடன் முதலிடத்திலும் பல்வந்த் ராஜ்புத் ரூ.372 கோடி சொத்துகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் அஜித்சிங் தாக்குரின் சொத்து மதிப்பு ரூ. 342 கோடி. போட்டியிடும் வேட்பாளா்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது.

42 போ் கல்வி கற்கவில்லை எனவும் 449 போ் பட்டம் பெற்று உள்ளனா் எனவும் அறிக்கை விவரம் தெரிவித்துள்ளது.