அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியை அடுத்த சாஹர்பூர் கிராமத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆளில்லா வானூர்தியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். அந்த வானூர்தியில் இருந்த வெள்ளை நிற பைக்குள் சந்தேகப்படும் வகையிலான பொருளும் கட்டப்பட்டு இருந்தது. அதனை மீட்ட பாதுகாப்புப் படையினர், அதிலுள்ள பொருள்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு 97 வானூர்திகள் ஊடுருவிய நிலையில், இவ்வாண்டு ஜூலை மாதம் வரை 107 வானூர்திகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது
1 mins read
-

