(காணொளி) நேருக்கு நேர் மோதி அசத்திய இந்திய ராணுவ வீரர்கள்

(காணொளி) நேருக்கு நேர் மோதி அசத்திய இந்திய ராணுவ வீரர்கள்

1 mins read
be592a86-e3b3-45e7-b467-4b986a4b16f8
படம்: இந்திய ஊடகம் -

இந்திய-அமெரிக்க நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சிகளின்போது எடுக்கப்பட்ட காணொளிகள் சமூகத் தளங்களில் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் காணொளிகளில் இந்திய இராணுவ வீரர்கள் ஆயுதங்கள் ஏதுமின்றி நேருக்கு நேர் மோதும் காட்சிகள் பலரை வியக்க வைத்துள்ளன.

ஆயுதங்கள் இல்லாமல் கைபலத்தை மட்டுமே கொண்டு எதிரியை வீழ்த்தும் திறமையை வீரர்கள் வெளிப்படுத்தினர்.

மற்றொரு காணொளியில் பருந்தை பயன்படுத்தி எதிரி ஆளில்லா வானூர்திகளை வீழ்த்தும் உத்தியையும் வீரர்கள் எடுத்துக்காட்டினர்.

ஆண்டுதோறும் இடம்பெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியில், உத்திகள், செயல்பாடுகள், பயிற்சிகள் போன்றவற்றை இருநாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன.